Friday, February 6, 2009

பரம்பொருளுக்கு என்னுடைய வேண்டுதல் ...


நான் நாத்தழும்பு ஏறிய நாத்திக வாதியல்ல ...
உன்னையே நம்பும் ஆத்திகன் ....
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் என் கடவுளே
ஏன் ஏன் இனிய ஈழ மக்களுக்கு இந்த துயரம்?

இந்துக்கள் நம்பும் ஏகன் அநேகனான ஆதி பரம்பொருளே
கிறித்துவர்கள் நம்பும் கர்த்தரே
இசுலாமியர்கள் நம்பும் அல்லாவே
மற்ற அனைத்து மதங்களும் குறிக்கும் நம்பும் ஏன் தெய்வமே
ஏன் ஏன் இனிய ஈழ மக்களுக்கு இந்த துயரம்?

ஈழ மக்கள் மீது உனக்கு கோபம் இருந்தாலும்
ஈழ மக்கள் உன் குழந்தைகள் அல்லவா?
அவர்கள் சார்பாக நான் மன்றாடுகிறேன்
அவர்களை காப்பற்ற வேண்டும் பரம்பொருளே !

எத்தனையோ முறை அவர்கள் அழுதாகி விட்டது
எத்தனையோ முறை அவர்கள் சொந்தங்களை இழந்தாகி விட்டது
எத்தனையோ முறை அவர்கள் உன்னிடம் முறையிட்டாகி விட்டது
எத்தனையோ முறை அவர்கள் சாக முடியும்?
அவர்கள் சார்பாக நான் மன்றாடுகிறேன்
அவர்களை காப்பற்ற வேண்டும் பரம்பொருளே !

தமிழ் ஜீவ மொழியல்லவா ? தமிழர் உன் சொந்தமன்றோ ?
தமிழுக்காக சங்க புலவராய் வந்தது நீயலையோ ?
தமிழுக்காக தமிழருக்காக ஓடி வரவேண்டும் - ஈழ
தமிழருக்கு ஒரு தனி நாடு தர வேண்டும் !

நீ ஒன்றும் ஓட்டு பிச்சைஎடுக்கும்
எங்கள் ஊர் அரசியல்வாதி இல்லையே
இரத்தம் குடிக்கும் சிங்கள ஓநாய்களிடம் இருந்து
எங்கள் தமிழ் ஜாதியை காப்பாற்று

தமிழனாய்ப் பிறந்து தமிழையே பேசி தமிழாலே பிழைப்பும் நடத்தி
ஈழத் தமிழரின் துயரை இழிவாக பேசும் தமிழனாய் இல்லாமல்
உண்மை தமிழனாய் இருந்து மன்றாடுகிறேன்
அவர்களை காப்பற்ற வேண்டும் பரம்பொருளே !

அவர்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை
அவர்கள் கோரிக்கை நியாயம் என்று உனக்கு தெறியும்
அவர்கள் நலமாய் வாழ; உலகெங்கும் சிதறியுள்ள
அவர்கள் ஒன்றிணைய ஈழம் மலர ஆசியுங்கள் கடவுளே!

நீங்கள் பொறுமையாய் இருந்து
தமிழ் சாதி அழியா வேண்டாம் இறைவனே
எனக்கென்ன என் குடும்பம் என் பிழைப்பு என் வேலை
என்றிருக்க என்னால் முடியாது இறைவனே
ஈழ தமிழர்கள் நலமாய் வாழ; உலகெங்கும் சிதறியுள்ள
ஈழ தமிழர்கள் ஒன்றிணைய; ஈழம் மலர ஆசியுங்கள் கடவுளே!

கருணையின் பிறப்பிடமே அன்பின் உருவமே
புத்தனை மறந்து போன இடத்தில் அன்பை மீண்டும் விதையுங்கள் !
உயிர்பலியை நிறுத்துங்கள் ! ஈழம் மலர வழி செய்யுங்கள் !
பரம்பொருளே நீங்கள் தான் அவர்களை காக்க வேண்டும் !

அனைத்து மதங்களும் குறிக்கும் நம்பும் ஏன் தெய்வமே
ஏன் ஏன் இனிய ஈழ மக்களுக்கு இந்த துயரம்?
அவர்கள் சார்பாக நான் மன்றாடுகிறேன்
அவர்களை காப்பற்ற வேண்டும் பரம்பொருளே !